• Jul 01 2025

சரிகமப வின்னர் திவினேஷிற்கு கிடைத்த அங்கீகாரம்..! மலை போல குவியும் விருதுகள்..!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப இசை நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களின் வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இதுவரை நடைபெற்ற சீனியர் மற்றும் லிட்டில் சாம்ப்ஸ் சீசன்கள் என அனைத்தும் நிகழ்ச்சியின் தரத்தில் சிறப்பானதாக காணப்பட்டது.


அந்த வகையில், சமீபத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் நிறைவடைந்த ‘சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4’ ன் டைட்டில் வின்னராக தேர்வானவர் தான் திவினேஷ். சிறு வயதிலேயே தனது திறமையை மிரட்டலாகக் காட்டிய திவினேஷின் வெற்றி, நம் அனைவருக்கும் ஒரு உணர்ச்சி மிகுந்த சுவாரஸ்யமான கதை.

திவினேஷ் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும், இசையில் இருந்த அவரது ஆர்வம் சிறப்பாகவே வெளிப்பட்டது. திவினேஷின் குழந்தைத்தனமும், வித்தியாசமான குரலும் இசை ஆசான்களையும், பாடகர் ஸ்ரீநிவாஸையும் மிரள வைத்தது.


சிறுவயதில் தந்தையை பார்க்கும் ஓர் பிள்ளையின் கனவுகள் எளியவையாக இருக்கலாம். ஆனால் திவினேஷ் அந்த கனவுகளை பெரிதாக்கி செயலாக்கிய சிறுவன். நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, திவினேஷ் கூறிய ஒரு விடயம் அனைவரையும் நெகிழ வைத்தது.

“என் அப்பாவுக்கு ஒரு நல்ல வண்டி வாங்கி கொடுக்கணும்… அவர் தினமும் வேலைக்குப் பஸ்லதான் போவாரு…” என்ற இந்த வார்த்தைகள் போட்டியின் நடுவரான பாடகர் ஸ்ரீநிவாஸ் அவர்களை நெகிழ வைத்தது. இதைத்தொடர்ந்து, அவர் நேரடியாக திவினேஷின் கனவை நிறைவேற்றும் வகையில் புதிய வண்டி ஒன்றை பரிசாக வழங்கினார்.


டைட்டிலை வென்ற பின் திவினேஷின் குடும்பம் பழைய வீட்டிலிருந்து புதிய வீட்டுக்கு மாறியிருக்கின்றது. இது அவர்களது வாழ்க்கையில் ஒரு புதிய கட்டத்தை ஆரம்பித்திருக்கிறது. புதிய வீட்டில், திவினேஷ் தனக்குக் கிடைத்த அனைத்து விருதுகளையும் அழகாக அலங்கரித்து வைத்துள்ளார். அதில் ஏராளமான விருதுகள் காணப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement