• Jun 24 2025

ரஜனிகாந்தை சந்தித்த வனிதா விஜயகுமார்..! எதற்காகத் தெரியுமா.?

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரைப்பட உலகில் நடிகை, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வலுவாக அடியெடுத்து வைக்கும் வனிதா விஜயகுமார் தற்போது “MRS & MR” என்ற புதிய திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரை ரசிகர்களை சந்திக்க வருகின்றார். ஜோவிகா விஜயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை வனிதா விஜயகுமார் இயக்கியுள்ளதோடு, அவர் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் உள்ளார்.


இந்தப் படம் ஜூலை 4ம் தேதி வெளியாகும் நிலையில், திரைக்கதையை விட உணர்ச்சிகளை நிரம்பவைக்கும் ஒரு நிகழ்வு அண்மையில் நடைபெற்றுள்ளது. அதாவது,  “MRS & MR” திரைப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு, ஜோவிகா விஜயகுமார் மற்றும் வனிதா விஜயகுமார் ஆகியோர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து, அவரது ஆசீர்வாதத்தை பெற்றுள்ளனர்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழ் திரையுலகை தன்னுடைய தனித்துவமான நடிப்பு, அசைவுகள் மற்றும் மனிதாபிமானத்தால் கட்டியெழுப்பியவர். அவரது ஆதரவும் ஆசீர்வாதமும் திரையுலகில் உள்ள ஒவ்வொரு புதிய முயற்சிக்கும் பெரும் ஊக்கமளிப்பதாக இருக்கும்.

இந்நிலையில், வனிதா விஜயகுமார் மற்றும் ஜோவிகா விஜயகுமார் இருவரும் ஸ்டைல் மன்னரின் இல்லத்திற்கு சென்று, அவரை நேரில் சந்தித்து,  “MRS & MR” திரைப்படம் குறித்த முழுமையான விவரங்களை பகிர்ந்துள்ளனர். ரஜினிகாந்த் படத்தின் தலைப்பு, உள்ளடக்கம் மற்றும் பெண்கள் தலைமைத்துவத்தில் உருவாகியிருக்கும் தன்மை ஆகியவற்றைக் கேட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement

Advertisement