• Jul 01 2025

என்னை சாய்த்தாளே..! – கறுப்பு உடையில் கண்களைப் பறித்த திரிஷா… வைரலாகும் போட்டோஸ்!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தனது அழகு, ஸ்டைல் மற்றும் சினேகிதமான சிரிப்பால் தமிழ் சினிமாவின் எவர்கிரீன் நாயகியாக திகழ்கிறார் த்ரிஷா. 2000-ம் ஆண்டு ‘மௌனம் பேசியதே’ மூலம் அறிமுகமான இவர், கடந்த இரு தசாப்தங்களுக்கும் மேலாக தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் எனப் பல மொழிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தைப் பிடித்துள்ளார்.


இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள நவீன போட்டோஷூட் புகைப்படங்கள், இணையதளங்களில் வெடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, கறுப்பு நிறத்தில் கிறுங்க வைக்கும் அளவிற்கு கிளாமராகவும் கம்பீரமாகவும் காட்சியளிக்கும் இந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் “OMG… Trisha never ages!” என்று கமெண்ட்ஸ் தெரிவித்துள்ளனர்.


இந்த போட்டோஷூட் வெளியான சில மணிநேரங்களிலேயே, இன்ஸ்டாகிராம், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் அதிகளவான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. வைரலான போட்டோஸ் இதோ.!


Advertisement

Advertisement