தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 9 தற்போது ரசிகர்களிடையே பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய சண்டைகள், உணர்ச்சிகள், காதல், மோதல்கள் என பல்வேறு திருப்பங்களுடன் நிகழ்ச்சி முன்னேறி வருகிறது.

இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தான் நடுவராக இருந்து தொகுத்து வழங்கி வருகிறார். வழக்கமான பிக்பாஸ் ஷோக்களை விட வேறுபட்ட பாணியில் இந்த சீசன் அமைந்துள்ளதால், ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்நிகழ்ச்சி குறித்து சீரியல் நடிகை லட்சுமி அளித்த சமீபத்திய கருத்துகள் தற்போது இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த சீசனில் இதுவரை நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா உள்ளிட்ட போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். மற்ற போட்டியாளர்கள் இடையே நிகழும் தினசரி சண்டைகள், உணர்ச்சிவசப்பட்ட உரைகள் மற்றும் திடீர் மோதல்கள் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்கின்றன.
அந்த வகையில், தற்போது சீரியல் நடிகை லட்சுமி தன்னுடைய கோபத்தை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது, “பிக்பாஸ் நிகழ்ச்சி கேவலத்தின் உச்சக்கட்டமாக இருக்கிறது. உங்கள் வீட்டு குழந்தைகள் பார்க்கிறார்களா இல்லையா? கொஞ்சமேனும் சமூக அக்கறை இருக்கிறதா? இந்த கன்றாவியை ஒளிபரப்பி என்ன சாதிக்கப்போகிறீர்கள்?” என்று கேட்டுள்ளார்.

அவர் மேலும், “உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் நாத்தமடிக்கும் குப்பைகள். அவர்களை வெளியே தூக்கி போட்டு சுத்தம் செய்ய வேண்டும். இவ்வளவு அசிங்கம் நடக்குது. அசிங்கமா பேசுபவர்களை விஜய் சேதுபதி கன்ட்ரோல் செய்ய வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
லட்சுமியின் இந்த பேட்டி வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் ஒரு சர்ச்சையை தவறாமல் உருவாக்குகிறது. இந்த சீசனும் அதே போல் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!