பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில், நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சண்டைகளும், ஒவ்வொரு வாக்குவாதங்களும் நிறைந்த வாரமாகவே காணப்படுகின்றன.
இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் 64ஆவது நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் இம்முறை நாமினேஷன் டாஸ்க் வித்தியாசமான முறையில் வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாமினேட் செய்யப்பட்ட இரண்டு பேரின் பெயரை பேப்பரில் எழுதி, அதனை பிக் பாஸ் கதவுக்கு வெளியே வீச வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அதில் ஹெல்தியா கேம் ஆடுற மாதிரி தெரியல என்று ரம்யாவின் பெயரை எழுதி வெளியே வீசுகின்றார் கானா வினோத் . பார்வதி, அரோராவை வைத்து ஒரு கேம் பிளே பண்ணுகிறார் என்று கமருதீனின் பெயரை எழுதி வெளியே வீசுகின்றார் திவ்யா.
என்னை வைச்சு டீம் பிளே பண்ணினார் என்று FJ பெயரை எழுதி ஆதிரை வெளியே தூக்கி எறிய, கோழைத்தனமான பதில் சொல்லுறாங்க என்று ரம்யா பெயரை எழுதி வெளியே வீசுகின்றார் விக்ரம்.
அத்துடன் சுத்தமா இன்வோல் ஆகவே இல்லை என்று வியானாவின் பெயரை வெளியே தூக்கி எறிகின்றார் சாண்ட்ரா . அதிகார துஷ்பிரயோகம் பண்ணுகிறார் என்று திவ்யாவின் பெயரை FJ யும், எல்லார்கிட்டயும் ரொம்ப நல்லவரா நடிக்கிறார் என்பது போல் சபரியின் பெயரை சுபிக்ஷாவும் நாமினேட் செய்து பேப்பரை வெளியே தூக்கி எறிந்துள்ளனர்.
Listen News!