• Dec 18 2025

அமீர்கான்–லோகேஷ் கூட்டணியின் அதகள அப்டேட்! ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய தகவல்கள்...

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் தனித்துவமான கதைகளையும், தரமான படைப்புகளையும் வழங்கி வரும் நடிகர் அமீர்கான், தனது படைப்புத் திறன் மற்றும் கதைகள் தேர்வு செய்யும் நேர்த்தியால் எப்போதும் தனி இடத்தைப் பெற்றவர். 


பல வருடங்களாக தரமான படங்களை வழங்கி வரும் நடிகர்களில் ஒருவராகத் திகழ்கிறார் அமீர்கான். அப்படிப்பட்ட நடிகர் குறித்து தற்போது தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களாக லோகேஷும்- அமீர்கானும் இணையும் கூட்டணி குறித்து தகவல்கள் பரவி வந்தன. குறிப்பாக, தமிழ் சினிமாவில் அதிகளவான ரசிகர்களைக் கவர்ந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமீர்கான் இணைந்து புதிய திட்டத்தை உருவாக்குவது பற்றிய தகவல்கள் பெரிய ஆர்வத்தை கிளப்பி வந்தன.


இப்போது, அதற்கான தொடக்க உறுதிப்படுத்தல் தானாக வந்து இருப்பது ரசிகர்களை இன்னும் உற்சாகப்படுத்தியுள்ளது.

சமீபத்திய ஊடக சந்திப்பில் நடிகர் அமீர்கான், லோகேஷ் கனகராஜ் உடன் நடந்த பேச்சுவார்த்தைகளை பற்றி திறந்த மனதுடன் பகிர்ந்துள்ளார். 

அவர் அதன்போது, “கடந்த மாதம் நானும் லோகேஷும் பேசினோம். அவர் மும்பைக்கு வரும் போது கதை குறித்து பேசுவதற்கான படலம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தத் திட்டம் தற்போது பைப்லைனில் உள்ளது. ஆண்டுக்கு ஒரு தரமான திரைப்படத்தை வழங்குவதே என் ஒரே நோக்கம். அதைச் சிறப்பாக செய்ய நான் முயற்சி செய்து வருகிறேன்.” என்றார்.

இந்த ஒரு விளக்கம் தமிழ் மற்றும் பாலிவுட் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டது. குறிப்பாக, லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய LCU (Lokesh Cinematic Universe) இந்திய அளவில் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அதில் அமீர்கான் போன்ற இந்தியாவின் முன்னணி நடிகர் இணையும் வாய்ப்பு ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. 

Advertisement

Advertisement