பிரபல நடிகர் அஜித் சினிமாவையும் தாண்டி கார் ரேஸ், பைக் ரேஸ், நண்பர்களுடன் ட்ரிப் செல்வது என பிற விஷயங்களிலும் அதிக ஆர்வம் கொண்ட ஒருவராக காணப்படுகின்றார். இவர் சமீபத்தில் துபாயில் நடந்த 24 ஹவர்ஸ் ஃரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்டு தனது அணி சார்பில் மூன்றாவது இடத்தை வெற்றி பெற்றார்.
இந்த ஆண்டு அஜித் நடிப்பில் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. அதில் விடாமுயற்சி திரைப்படம் மகிழ் திருமேனி இயக்கத்தில் இன்னும் இரண்டு நாட்களில் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதேபோல ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டுள்ளது.
d_i_a
விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு இதன் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் அடிக்கடி இது தொடர்பான புகைப்படங்களையும் போஸ்ட்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்து வருகின்றது.
மேலும் விடாமுயற்சி திரைப்படம் 3650 திரைகளுக்கு மேல் ஒளிபரப்பாக உள்ளதாகவும் மலேசியாவில் பிரீ புக்கிங் மட்டுமே ஒரு கோடிக்கு மேல் கலெக்ஷன் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், விடாமுயற்சி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே 5 லட்சத்திற்கும் மேல் டிக்கெட்டை விற்று உள்ளதாம். இதனால் விடாமுயற்சி படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் 40 கோடி வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அஜித்தின் ரசிகர்கள் அவருடைய தரிசனத்திற்காக காத்துக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!