• Apr 02 2025

அடுத்த படத்திற்கு இசையமைக்க மறுத்தாலும் பார்த்திபனுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் செய்த உதவி..!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த இசையமைப்பாளர் தான் இமான். இவர், சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஒரு சர்ச்சையில் சிக்கி இருந்தார்.

அதன் பின் தொடர்ந்து பல சரிவை கண்டு வந்த நிலையில், தற்போது பார்த்திபன் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் டீன்ஸ் படத்தில் கமிட் ஆகியுள்ளார்.இத்திரைப்படத்தின் பாடல் ஒன்று வெளியாகி வைரலாகி உள்ளது.


சிரேயாஹோர்சல் குரலில் இமான் இசையில் வெளியாகும் இந்த பாடலானது தற்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோடு, பல சினிமா பிரபலங்களும் இசையமைப்பாளர் இமானுவேலுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் குவித்த வண்ணம் உள்ளனர்.

நடிகர் பார்த்திபன் தனது அடுத்த படமான ’டீன்ஸ்’ படத்திற்கு இசையமைக்க முதலில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானை தான் அணுகினார். ஆனால் ஏஆர் ரஹ்மான் பிஸியாக இருப்பதால் அந்த படத்திற்கு தன்னால் இசையமைக்க முடியாது என்று மறுத்துவிட்டார். அதன் பிறகு தான் இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். 

இந்த நிலையில் பார்த்திபன் படத்துக்கு இசையமைக்கவில்லை என்றாலும் அவர் மீது கொண்ட நட்பு மற்றும் மரியாதை காரணமாக ’டீன்ஸ்’ படத்தின் சிங்கள் பாடலை ஏஆர் ரஹ்மான் தனது சமூக வலைதளத்தில் வெளியீட்டு, உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement