• Apr 17 2026

தயாரிப்பாளர் ஆன வானிலை அறிவிப்பு தொகுப்பாளினி.. ஹீரோ யார் தெரியுமா?

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!


வானிலை அறிவிப்பு செய்திகள் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆகி அதன் பின்னர் தொகுப்பாளினி, சீரியல் நடிகை என பிரபலமானவர் நடிகை மோனிகா. இவர் தற்போது சினிமா தயாரிப்பாளராக உள்ளதாகவும் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்கும் படத்தை தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சன் செய்திகளுக்காக உங்கள் மோனிகாஎன்ற குரலை சன் டிவி செய்தி கேட்பவர்கள் கண்டிப்பாக கேட்டிருப்பார்கள். வானிலை செய்தி மூலம் பிரபலமான மோனிகா அதன் பிறகு சீரியல், சினிமா என பிசியாகிய நிலையில் சமூக வலைதள பக்கங்களில் பிரபலமானார் என்பது தெரிந்தது.

ஒரு கட்டத்தில் அவர் வானிலை செய்தி வாசிக்கும் வேலையை விட்டுவிட்டு சினிமா, சீரியல் என பிஸியாக இருந்த நிலையில் திடீரென அவருக்கு திருமணம் ஆனது.  திருமணத்திற்கு பின்னர் அவர் சமூக வலைதளங்களில் மட்டும் பிரபலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என வித்தியாசம் பார்க்காமல் அவர் பேசிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி. இதனால் அவருக்கு சில பிரச்சனைகள் மற்றும் மிரட்டல் வந்ததாகவும் கூட கூறப்பட்டது.

இந்த நிலையில் மோனிகாவின் கணவர் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரிடம் வேலை பார்ப்பதாகவும் தற்போது அந்த வேலையில் தான் அவர் பிசியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மோனிகா தற்போது ஒரு திரைப்பட தயாரிப்பாளராக உள்ளார். நடிகர் சித்தார்த் நடித்து வரும் படத்தை அவர் தயாரித்து வருவதாகவும் இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருப்பதாகவும் தெரிகிறது. இந்த படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து மோனிகா, சினிமா தயாரிப்பதிலும் சீரியல் தயாரிப்பதிலும் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement