தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ், தனது சமீபத்திய நேர்காணலில் பலரை ஆச்சரியப்படுத்தும் தகவலை வெளியிட்டுள்ளார். அவர் உருவாக்கிய புதிய திரைப்படமான "மதராஸி"யில் உள்ள ஒரு முக்கிய கதாப்பாத்திரம், ஆரம்பத்தில் ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
ஆனால், முறையான பேச்சுவார்த்தைகள் நடைபெறாத காரணத்தால், அந்தக் கதையின் பயணம் தனி பாதையில் சென்றதாகவும், முடிவில் அந்த கதாப்பாத்திரத்துக்குத் தகுதியானவராக நடிகர் சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டதாகவும் பகிர்ந்துள்ளார்.
அந்நேர்காணலில் முருகதாஸ், "7 வருடங்களுக்கு முன்பு மதராஸி படத்தில உள்ள கதாப்பாத்திரத்தின் ஒரு குணாதிசயத்தை மட்டும் ஷாருக்கானுக்கு சொன்னேன். அது அவருக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஆனால், முறையான பேச்சுவார்த்தை இல்லாததால் அந்த திட்டம் அங்கேயே நின்றது. பிறகு அந்த கதாப்பாத்திரத்தை இன்னும் மெருகேற்றி சிவகார்த்திகேயனை தேர்வு செய்தேன்." என்று கூறியிருந்தார்.
இந்த கருத்து தமிழ் ரசிகர்களிடம் மட்டுமல்லாது, ஹிந்தி திரைப்பட ரசிகர்களிடையும் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. "மதராஸி" திரைப்படம் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!