இந்தியத் திரை உலகில் பிரபல நடன இயக்குநர், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்ந்து வருகிறார் பிரபுதேவா. இவர் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று செல்லமாகவும் ரசிகர்களால் அழைக்கப்படுகின்றார்.
மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான அக்னி நட்சத்திரம் என்ற படத்தில் 'ராஜா ராஜாதி ராஜா' என்ற பாடலுக்கு குரூப் டான்சராக ஆடியவர் பிரபுதேவா. அதன்பின்பு ஜென்டில்மேன் படத்தில் 'சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே' என்ற பாடலுக்கு ஆடி பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானார்.
இதை தொடர்ந்து அவருடைய குரூப் டான்சராக இருந்த ரமலத் என்ற முஸ்லிம் பெண்ணை பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகளும் பிறந்தன. ஒரு கட்டத்தில் முஸ்லிமாக இருந்த ரமலத் தனது கணவருக்காக இந்துவாக மாறி லதா என தனது பெயரையும் மாற்றிக் கொண்டார்.
2008 ஆம் ஆண்டு பிரபுதேவாவின் மூத்த மகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 13 வயதிலேயே உயிரிழந்தார். இதனால் நடிப்பதை விட்டு விலகி இருந்த பிரபுதேவா, நீண்ட நாட்களுக்குப் பிறகு நயன்தாராவை வைத்து வில்லு படத்தை இயக்கினார். இதன்போது நயன்தாராவிற்கும் பிரபுதேவாவுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்தார்கள்.
ஒரு கட்டத்தில் பிரபுதேவா லதாவை விவாகரத்து செய்தார். அதன் பின்பு பிசியோதெரபிஸ்ட் ஹிமானி சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். அவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில், பிரபு தேவா தனது மனைவியை பிரியும் போது 100 கோடி ரூபாய் செட்டில்மெண்ட் பண்ணியதாக குட்டி பத்மினி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார் .
அதன்படி அவர் கூறுகையில் பிரபுதேவா தனது முதலாவது மனைவியை விவாகரத்து பெற்று பிரியும்போது அவருக்கு 100 கோடி கொடுத்தாரு.. தமிழ்நாட்டிலேயே இப்படி ஒரு டிவோஸ் செட்டில்மெண்ட் கிடைத்தது இதுதான் முதல் தடவை என வழக்கறிஞர் சொன்னார். கிட்டத்தட்ட நூறு கோடிக்கு மேல் பிரபுதேவா மனைவிக்கு செட்டில்மெண்ட் பண்ணினாரு.. அதை பிரபுதேவாவும் விருப்பப்பட்டு தான் கொடுத்தார் என குட்டி தெரிவித்துள்ளார் .
Listen News!