• Jul 05 2026

சினிமாவில் எப்போது வேண்டுமானாலும் தலைவன் உருவாகலாம்..

shali / 2 months ago

Advertisement

Listen News!

ராதா ரவி சமீபத்தில் ஒரு விருது நிகழ்ச்சியில் பேசிய கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அவர் தனது உரையில், “சினிமாவில் இருந்த ஒரு சகோதரர் இன்று பெரிய இயக்கங்களுக்கு எல்லாம் போட்டியாக நிற்கிறார். சினிமாவில் எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இப்போது நான் பேசிக்கொண்டிருக்கிறேன்; 


இந்த மேடையை விட்டு கீழே இறங்கும் நேரத்தில் திடீரென நான் தலைவன் ஆகிவிடலாம். அதற்கு காரணம் என்ன என்று நீங்கள் கேட்க முடியாது.” என்று குறிப்பிட்டார். இந்த கருத்துகள், நேரடியாக பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும், விஜய்யின் அரசியல் பயணத்தை குறிக்கிறது என ரசிகர்கள் புரிந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், விஜய் தற்போது தவெக கட்சியின் தலைவராக அரசியலில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அவரது கட்சி தனித்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.மே 4ஆம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகள், விஜய்யின் அரசியல் எதிர்காலத்திற்கும், அவரது கட்சியின் வலிமைக்கும் முக்கியமான சோதனையாக பார்க்கப்படுகிறது. ராதா ரவியின் இந்த கருத்துக்கள், சினிமாவிலிருந்து அரசியலுக்கு வரும் மாற்றங்கள் எவ்வளவு வேகமாக நடக்கின்றன என்பதையும், அதற்கான எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்துவதாக சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement