• Jul 05 2026

ராம் சரணின் 'பெத்தி' பட ரிலீஸ் தேதி இதுதானா? குஷியில் ரசிகர்கள்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

'பெத்தி' திரைப்படம், இயக்குநர் புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் முன்னணி நடிகராக ராம் சரண் நடித்துள்ளார். அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் இணைந்து நடித்துள்ளார். பான் இந்தியா அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம், தற்போது அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது.


படக்குழு வெளியிட்ட தகவலின்படி, ‘PEDDI’ திரைப்படம் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகியதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. 

கிராமிய பின்னணி, வலுவான கதைக்களம் மற்றும் உணர்ச்சிபூர்வமான திரைக்கதை ஆகியவை இப்படத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என கூறப்படுகிறது.

ராம்சரண் இந்த படத்தில் தனது நடிப்பில் புதிய பரிமாணத்தை காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஜான்வி கபூரும் தெலுங்கு சினிமாவில் தனது புதிய பயணத்தை இந்த படத்தின் மூலம் தொடங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement