• Jul 25 2026

தேர்தல் முடிவுக்கு முன் இளையராஜா கொடுத்த சிக்னல்? விஜய்யின் பாடலை இப்போது பகிர்ந்தது ஏன்?

shali / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழக தலைவராக அரசியலில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி தனித்துப் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. மே 4ஆம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகள், விஜய்யின் அரசியல் தாக்கம் எவ்வளவு பெரியது என்பதை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த சூழலில், இளையராஜா செய்த ஒரு செயல் தற்போது பெரிய பேசுபொருளாகியுள்ளது. ‘இது எங்கள் நீதி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சின்னதம்பி உன்னை நம்பி நாடு இருக்கு’ என்ற பாடலை, விஜய்யின் புகைப்படத்துடன் தனது யூடியூப் தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இந்த பாடலில் விஜய் சிறிய வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

திரைத்துறையில் சில நடிகர்கள் விஜய்க்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருந்தாலும், இளையராஜாவின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தை ஈர்த்துள்ளது. தேர்தல் முடிவுகள் வர இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இந்த பதிவை வைத்து அவர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருக்கலாம் என TVK ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

இது சமூக வலைத்தளங்களில் தீவிரமாக வைரலாகி, அரசியல் மற்றும் திரையுலக ரசிகர்களிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது.


Advertisement

Advertisement