• Dec 21 2024

‘அண்ணா’ சீரியலில் இருந்து திடீரென நாயகன், நாயகி விலகுகிறார்களா? அதிர்ச்சி தகவல்..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

ஜீ டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அண்ணா’ சீரியலில் திடீரென நாயகன், நாயகி என இரண்டு நட்சத்திரங்கள் விலக இருப்பதாக கூறப்படுவது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சன் டிவி, விஜய் டிவியை அடுத்து ஜீடிவியில் உள்ள ஒரு சில சீரியல்களும் டிஆர்பி ரேட்டிங்கில் நல்ல இடத்தில் உள்ளன என்பதும் குறிப்பாக மிர்ச்சி செந்தில் நடித்து வரும் ‘அண்ணா’ சீரியல், அண்ணன் தங்கை குடும்ப செண்டிமெண்ட் பாசத்துடன் கூடிய கதை என்பதால் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் தெரிந்தது.

அண்ணன் தனது நான்கு தங்கைகள் மீது வைத்திருக்கும் பாசத்தை மையமாக கொண்டு காதல், கோபம், பகை போன்ற கமர்சியல் அம்சத்துடன் இந்த சீரியல் சென்று கொண்டிருக்கிறது.

இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில் அண்ணன் கேரக்டரில் நடிக்க நித்யா ராம் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் முக்கிய வேடத்தில் பூ விலங்கு மோகன், ப்ரீத்தா சுரேஷ், சத்யா, விஜே தாரா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 500 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ‘அண்ணா’ சென்று கொண்டிருக்கும் இந்த தொடரில் திடீரென  நாயகன் செந்தில் மற்றும்  நாயகி நித்யா ராம்  விலக போவதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது.

ஆனால் ஜீ தொலைக்காட்சி தரப்பில் இது குறித்து விசாரித்த போது செந்தில், நித்யா ராம் ஆகிய இருவரும் வெளியேற வாய்ப்பே இல்லை என்றும் இந்த தகவல் முற்றிலும் வதந்தி என்றும் தயவு செய்து இது போன்ற தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதனை அடுத்து இந்த சீரியலில் இருந்து இப்போதைக்கு யாரும் விலகப் போவதில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement