• Sep 07 2024

’தங்கலான்’ மேடையில் கம்பெடுத்து சண்டை போட்ட மாளவிகா - பார்வதி.. அதிர்ச்சி வீடியோ..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’தங்கலான்’ திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பா. ரஞ்சித், விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

’தங்கலான்’ திரைப்படத்தில் சிலம்பு சண்டை காட்சிகள் இருக்கிறது என்பதற்காக நிஜமாகவே மாளவிகா மோகனன் சிலம்பு பயிற்சி பெற்றார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் வீடியோக்களை ஏற்கனவே அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் நேற்றைய இசை வெளியீட்டு விழாவில் மாளவிகாவிடம் கேள்வி கேட்ட தொகுப்பாளினி, ‘இந்த இடத்தில் நீங்கள் சிலம்பு சண்டை போட வேண்டும் என்றால் யாருடன் மோதுவீர்கள்? என்று கேட்டதற்கு உடனே அவர் ’தங்கலான்’ என்று பதில் கூறினார்.

ஆனால் ’தங்கலான்’ விக்ரம்,  ’முடியாது’ என்று கூறியதை எடுத்து அவரது மனைவி கேரக்டரில் நடித்த பார்வதி களத்தில் இறங்கினார், மாளவிகா, பார்வதி இருவரும் கம்பை சுழற்றி சிலம்பு சண்டை போட்ட காட்சிகளின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மாளவிகா மோகனன் அச்சு அசலாக சிலம்பு சண்டை வீராங்கனை போலவே கம்பை சுழற்றிய காட்சியை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.


Advertisement

Advertisement