• Sep 10 2024

பாண்டியனிடம் கேள்வி.. மீனா அப்பாவிடம் சவால்.. செந்திலுக்கு இம்புட்டு தைரியமா?

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்று மீனா குறித்து பாண்டியன் பேசியதை வருத்தத்துடன் தனது சகோதரர்களிடமும் பழனி மாமாவிடம் செந்தில் கூறி வருகிறார். மீனா ஆசைப்பட்ட ஒரு சின்ன விஷயத்தை கூட என்னால் செய்ய முடியவில்லை என்று கூற அப்போது ஆறுதல் கூறும் சரவணன், உனக்கு பேப்பர் தானே வேணும், நீ வாங்கிக்கோ, நான் காசு தருகிறேன் என்று சொல்ல அப்போது காசு ஒரு பிரச்சனை இல்லை, மீனா நம்ம குடும்பத்திற்காக எவ்வளவு செய்துள்ளார். ஆனால் அவளை யாருமே புரிந்து கொள்ளவில்லை, குறிப்பாக அப்பா புரிந்து கொள்ளவில்லை என்று சொல்ல அப்போது அங்கு பாண்டியன் வருகிறார்.

பாண்டியன் இடம் செந்தில் ’நீங்கள் மீனாவை எல்லோர் முன்னிலையில் இப்படி பேசியிருக்கக் கூடாது, எல்லோரும் முன்னிலும் நீங்கள் அவளை அவமானப்படுத்தி விட்டீர்கள்’ என்று சொல்ல பாண்டியன் கோபப்படுகிறார். எனக்கே அறிவுரை சொல்லும் அளவுக்கு வந்து விட்டாயா என்று அவர் கை ஓங்க, அப்போது அங்கு வரும் கோமதி அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்கிறார்.



இதனை அடுத்து கோபமாக செந்தில் பைக்கை எடுத்துக் கொண்டு செல்கிறார். இந்த நிலையில் ஆபீசுக்கு செல்லும் மீனாவை சந்திக்கும் செந்தில், உன்னை டிராப் செய்கிறேன் என்று அழைத்துச் செல்கிறார். அப்போது அவர்  நான் வீட்டில் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்ட நிலையில் மீனா அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு மாதிரி இருக்கும், வீட்டுக்கு தகுந்தபடி தான் நடந்து கொள்ள வேண்டும், எங்கள் வீட்டில் கேட்காமலே எல்லாம் கிடைக்கும், ஆனால் இங்கே சில விஷயங்களை கேட்கக்கூடாது என்பதை புரிந்து கொண்டேன்’ என்று கூறுகிறார்.

இந்த நிலையில் கதிரை சந்திக்கும் செந்தில், மீண்டும் மீனா குறித்து வருத்தப்பட அப்போது ’வா நாம் இருவரும் ஒரு இடத்துக்கு போவோம்’ என்று மீனாவின் வீட்டுக்கு கதிரை அழைத்துச் செல்கிறார். அங்கு மீனா அப்பாவிடம் சவால் விடும் செந்தில் ’உங்களுக்கு தேவை கவர்மெண்ட் மாப்பிள்ளை தானே, நானும் கவர்மெண்ட் வேலை வாங்கி காட்டுகிறேன்’ என்று கூற அதனை கதிர் வீடியோ எடுக்கும் காட்சிகளுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement