• Dec 06 2024

உறுப்பினர் சேர்க்கையில் அசத்தும் தமிக வெற்றிக் கழகம்..இலக்கை நோக்கி அதிரடி திட்டம்!

Mathumitha / 2 weeks ago

Advertisement

Listen News!

TVK உறுப்பினர் சேர்க்கையில் புதிய சாதனையை எட்டியிருக்கிறது. தற்போதுவரை ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்ந்துள்ளது என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது, கட்சியின் வளர்ச்சியில் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.


கட்சியின் தலைவர் தளபதி விஜய் 2026 தேர்தலுக்குள் மூன்று கோடி உறுப்பினர்களை சேர்க்கும் மாபெரும் இலக்கை நிர்ணயித்துள்ளார். இதற்கான திட்டம் மிகவும் அதிரடியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.


TVK இப்போது தமிழக அரசியலில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் ஆகிய முக்கிய கட்சிகளுக்கு அடுத்த 5வது பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.


கட்சியின் இந்த வளர்ச்சி, மாநில அளவிலான தேர்தல் தருணங்களில், மக்களிடையே அதன் பாதிப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உறுப்பினர் சேர்க்கை மட்டுமின்றி, தரமான சேவைகள் மற்றும் சமூக நலத்திட்டங்கள் மூலமாகவும் மக்கள் மத்தியில் பேராதரவை பெறும் நோக்கில் கட்சி செயல்பட்டு வருகிறது.

2026 தேர்தல் TVK க்கான புதிய வரலாற்றை உருவாக்குமா என்பதற்கான எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளது.

Advertisement

Advertisement