• Jan 18 2025

தெலுங்கர்கள் குறித்து அவதூறான கருத்து..!தலைமறைவாகிய நடிகை கஸ்தூரி கைது..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை கஸ்தூரி, தெலுங்கர் சமூகத்தை அவதூறாக விமர்சித்த வழக்கில் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தெலுங்கு மாநிலங்களில் பெரும் அதிர்சியினை ஏற்படுத்தியுள்ளது.அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர், எழும்பூர் போலீசார், இரண்டு தனிப்படைகளை அமைத்து தேடி வந்த நிலையில் பின்னர், ஹைதராபாத் நகரில் அவர் பதுங்கி இருப்பதை உறுதி செய்த போலீசார், அதிரடி நடவடிக்கையாக தற்போது அவரை கைது செய்துள்ளனர்.


கஸ்தூரியின் அவதூறான கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தற்போது அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதால், விவகாரம் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கஸ்தூரி, தன்னுடைய கருத்துக்களால் முன்பும் பல முறை சர்ச்சைக்கு உள்ளான நிலையில், இந்த சம்பவம் அவருடைய தொழிலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

Advertisement

Advertisement