• Jan 19 2025

ஆல் டைம் ஜூத் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா பிறந்தநாள் இன்று ! இவரின் சொத்து மதிப்பு இவ்வளவா ?

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

பாலகிருஷ்ணா  அல்லது  பாலையா  என்று அழைக்கப்படும் நந்தமுரி பாலகிருஷ்ணா இந்திய நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார் .அண்மையில் நடந்து முடிந்த இந்திய மக்களவை தேர்தலில்  இந்துபுரம் தொகுதியில் இருந்து ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.


ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரான N. T. ராமாராவின் மகனான பாலகிருஷ்ணா சிறுவயதிலேயே திரையில் அறிமுகமானார். இவர் மூன்று மாநில நந்தி விருதுகளையும் ஒரு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதையும் பெற்றவர்.நடனத் திறமைக்கு பெயர் பெற்ற பாலகிருஷ்ணா நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். 


கடந்தாண்டு இவர் நடிப்பில்  வெளியான பகவந்த் கேசரி படமானது இந்திய அளவில் பேசப்படும் ஒரு படமாக மாறியது.இன்று பிறந்த நாளை கொண்டாடும் இவரின் சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் 700 கோடி ரூபாவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement