• Jan 09 2025

அக்கா பாசத்த வச்சே 90 நாள் ஓட்டிட்டிங்களே.! ஜெஃப்ரியின் முகத்திரை கிழிந்த வைரல் பேட்டி

Aathira / 11 hours ago

Advertisement

Listen News!

பல திறமையுள்ள கலைஞர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் கானா பாடகர்களை பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ளேடுத்து வருகின்றார்கள். அந்த வகையில் இந்த வருடம் பிக் பாஸ் சீசன் 8ல் கலந்து கொண்ட கானா பாடகர் தான் ஜெஃப்ரி.

ஜெஃப்ரியின் குடும்பம் மிகவும் வறுமைக்குட்பட்ட குடும்பமாகவும் தாயின் பராமரிப்பில் வளர்ந்த ஒரு நபராகவும் ஜெஃப்ரி காணப்படுகின்றார். மேலும் இசை மீது உள்ள ஆர்வத்தினால் அதையே தனது தொழிலாகவும் மாற்றிக் கொண்டுள்ளார்.

d_i_a

பிக்பாஸ் மேடையில் தனது தாயை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். தனது குடும்பத்தின் வறுமை நிலை மாற வேண்டும் என்ற நோக்கிலேயே ஆரம்பத்தில் நுழைந்தார். ஆனாலும் அதற்கு பிறகு ஜெஃப்ரியின் செயற்பாடுகள் ரசிகர்களுக்கு முகம் சுளிக்க வைக்கும் வகையிலேயே காணப்பட்டது.

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட்டாகி  வெளியே சென்ற போட்டியாளர்களை பேட்டி எடுத்து வரும் மைக்கல், ஜெஃப்ரியை வைத்து செய்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.


அதன்படி, அக்கா பாசத்தை வைத்தே பிக்பாஸில் 90 நாட்களை கடந்து விட்டீர்களே என ஜெஃப்ரியிடம் மைக்கல் கேள்வி எழுப்பி உள்ளார். 


ஆனால் அதற்கு பதிலளித்த ஜெஃப்ரி, அப்படியென்றால் நான் 50 நாட்களாக பாய்ஸ் டீம் பக்கம் தான் இருந்தேன். அதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

எனினும் ஜெப்ரியின் பேச்சுகளுக்கு ஈடு கொடுக்க முடியாத வகையில் மைக்கல் தொடர்ச்சியாக அவரிடம் பல கேள்விகளை அடுக்கியுள்ளார்..

ஆனாலும் தான் பெண்கள் அணியில் மட்டும் இல்லை.. சத்யா உடனும் நெருக்கமான பந்தத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அக்கா பாசத்தை மட்டும் வைத்து நான் இவ்வளவு தூரம் பயணிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


 பிக் பாஸ் வீட்டில் ஜெஃப்ரி இருந்த வரைக்கும் பெண்கள் அணியில் தான் அதிகமாக காணப்பட்டார். அதிலும் சௌந்தர்யா, அன்ஷிதாவுக்கு பின்னால் இவர் செய்த சேட்டைகள் ரசிகர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement