• Jan 10 2025

நீங்க உள்ள கேம் ஆடுறிங்க சவுண்ட் வெளியே ஆடுறாள்! விஷால் எதுவுமே பண்ணல சும்மா இருக்கான்!

subiththira / 11 hours ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 8 தற்போது இறுதி வாரங்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியில் சுவாரஷ்யத்தை கூட்ட எலிமினேஷன் போட்டியாளர்களை மீண்டும் உள்ளே இறக்கிவிட்டு ஆட்டம் பார்க்கிறார் பிக்பாஸ். இந்நிலையில் தற்போது அதிரடியான ப்ரோமோ ரிலீஸாகியுள்ளது.


இந்த ப்ரோமோவில் " மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ள 8 போட்டியாளர்களில் இருந்து 2 நபர்களை தெரிவு செய்து ரீப்ளேஸ்மென்ட் செய்ய தெரிவு செய்து சொல்ல வேண்டும். அதே போல டாப் 8 போட்டியாளர்களின் 2 நபர்களை தெரிவு செய்து யாரை ரீப்ளேஸ்மென்ட் செய்ய வேண்டும் என தெரிவு  செய்து சொல்லுமாறு பிக் பாஸ்" கூறுகிறார். 


இதனிடையே முத்து "ரவீந்தர் சார் ரீப்ளேஸ்மென்ட்டுக்கு தகுதியானவர் என்று நினைக்கிறேன்" என்று சொல்கிறார். ரயான் "ரவீந்தர் சார் மெதுவா காய் நகர்த்திக்கொண்டு போகிறார்" என்று சொல்கிறார். அதேபோல அர்னவ் "விஷால் மற்றும் அருணை" சொல்கிறார். "விஷால் நிறைய நாட்கள் எதுவும் செய்யாமல் சும்மாவே இருந்திங்க" என்று ரியா சொல்கிறார். மேலும் சுனிதா "நீங்க எல்லாரும் உள்ள கேம் ஆடுறிங்க சவுந்தர்யா வெளிய ஒரு கேம் ஆடுறா" என்று சொல்கிறார். இத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.

Advertisement

Advertisement