• Jan 18 2025

திடீரென ஸ்லிம்மாக மாறிய அஜித்..! ரசிகர்களுக்கு செம பதிலடி! வைரலாகும் போட்டோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் முன்னணி ஹீரோவாக திகழும் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

குறித்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தற்போது மீண்டும் அசர்பைஜானில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா மற்றும் பிரியா பவானி ஷங்கர் என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். அத்துடன் விடாமுயற்சி படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.


இந்த நிலையில், நடிகர் அஜித்தின் உடற்பருமனை பலரும் கிண்டல் செய்து வந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது உடல் எடையை பாதியாக குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார் நடிகர் அஜித்.

அதன்படி, விடாமுயற்சி படத்திற்காக தனது உடல் எடையை தாறுமாறாக குறைத்துள்ளார் அஜித்.

மேலும், குறித்த படப்பிடிப்பில் ரசிகர்களுடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. 

Advertisement

Advertisement