• Nov 21 2025

காதல் மனைவியுடன் ட்ரிப் அடித்த அஜித்குமார்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

ஹாலிவுட்டில் சிறந்த நட்சத்திரங்களாக மட்டும் இல்லாமல் சிறந்த காதல் தம்பதியாக வலம் வருபவர்கள் தான் அஜித் ஷாலினி ஜோடி.  இவர்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர் கூட்டம் காணப்படுகின்றது.

தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பினால் முன்னேறி இன்று உச்ச நடிகராக காணப்படுபவர் தான் அஜித் குமார். இவருக்கு நடிப்பு துறையில் மட்டும் இல்லாமல் கார் ரேஸ் ஓடுவது, பைக் ரேஸ் ஓடுவது, அடிக்கடி ட்ரிப் செல்வது போன்றவை பொழுதுபோக்காக காணப்படுகின்றது.

அஜித்தும் ஷாலினியும் அமர்க்களம் என்ற படத்தில் ஒன்றாக நடிக்கும் போது அவர்களுக்கு இடையில் காதல் மலர்ந்தது. அதன் பின்பு பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது வரையில் அந்த திருமணத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.


இந்த நிலையில், தற்போது அஜித்தும் ஷாலினியும் வெளிநாடு ஒன்றுக்கு ட்ரிப் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோவை ஷாலினி வெளியிட்டு உள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் அஜித் ஷாலினி ஜோடிக்கு யார் இணையாவார்? இவர்களைப் போல யாரும் காதல் பண்ண முடியுமா? என்று தமது கமெண்ட்ஸ்களை அடுக்கி வருகின்றார்கள். தற்போது தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் பலரும் விவாகரத்து சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் அவர்களுக்கு மத்தியில் அஜித் ஷாலினியும் உதாரணமாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement