• Jan 18 2025

18 வருசத்துக்கு பிறகு சூர்யா கூட ரொமாண்டிக் படம் நடிக்க போறேன்! இயக்குநர் யாரு தெரியுமா?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் காதல் ஜோடியாக இன்று வரை திகழ்ந்து வருபவர்கள் தான் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா. 

அனேகமான சினிமா பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் ஒரு சிறு ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விடுகின்றனர். ஆனால் சூர்யா- ஜோதிகா இன்று வரை தமது காதல் பயணத்தில் ஒன்றாக பயணித்து வருகிறார்கள்.

ஆரம்பத்தில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு வந்த போதிலும், அதையெல்லாம் எதிர்த்து இரு வீட்டார்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்தி தனது குடும்ப வாழ்க்கை கவனித்துக் கொண்டார் ஜோதிகா. ஆனாலும் தற்போது பிள்ளைகள் வளர்ந்து விட்ட நிலையில் '36 வயதிலேயே' என்ற படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்து இருந்தார். 


அந்தப் படம் இவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அதைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வெற்றி பெற்றார். நடிகை ஜோதிகா நடிப்பில் இறுதியாக வெளியான சைத்தான் திரைப்படம் வசூலில் 100 கோடியை தாண்டி இருந்தது.


இந்த நிலையில், தற்போது நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து மீண்டும் ஒரு படம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது சில்லுக்கருப்பட்டி பட இயக்குநர் ஹலிதாவோ இல்லை பெங்களூர் டேஸ் படத்தின் இயக்குநர் அஞ்சலி மேனனோ இயக்கலாம் அந்த படத்தை இயக்கலாம் என்றும்,  இது பக்கா ரொமான்டிக் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

ஏற்கனவே, நல்ல ரொமான்டிக் படமாக இருந்தால்  நானும் சூர்யாவும் இணைந்து நடிக்கத் தயார் என்று ஜோதிகா சொல்லியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement