• May 02 2024

இன்னும் ஒரு மாதத்தில் தமன்னாவை பேயாக பார்க்கலாமா? வெளியானது ரிலீஸ் தேதி

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா வரலாற்றில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படம் தான் இதுவரையில் நான்கு பாகங்களில் உருவாகி உள்ளது.

10 வருடங்களுக்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, வினய் ராய், ராய் லட்சுமி ஆகிய பல சினிமா பிரபலங்களின் அட்டகாசமான நடிப்பில் வெளியாகி பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்த படம் தான் அரண்மனை.

இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து எடுக்கப்பட்ட சீக்குவல்ஸ் ஆன அரண்மனை பாகம் இரண்டு, பாகம் மூன்று ஆகிய  திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் இடத்தில் பெரும் வரவேற்பை பெற்றது.


தற்போது வெளியாகவுள்ள அரண்மனை  நான்காம் பாகத்தில் சந்தோஷ், தமன்னா, ராஷி கன்னா,சந்தானம்,ஜோகி பாபு ,மொட்டை ராஜேந்திரன்,கோவை சரளா போன்ற பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்க உள்ளனர்.


இந்த படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. 

இந்த நிலையில், சுந்தர்.சி இயக்கி நடித்த அரண்மனை படத்தின் நான்காம் பாகம் எதிர்வரும் மே மாதம் 03ம் திகதி வெளியாக உள்ளது என அதிகார்வபூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த தகவலை இந்த படத்தின் இயக்குநர் சுந்தர்.சி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement