விஜய் தொலைக்காட்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் குடும்பத்தினர் வருகையை தொடர்ந்து இந்த வாரம் செலிபிரெட்டி வருகை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஷ்ணு,அர்ச்சனாவை தொடர்ந்து அடுத்ததாக பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா மேனன் மற்றும் பவித்ராவின் நண்பி சியமந்த கிரண் ஆகியோர் வருகை தந்துள்ளார்கள்.
பிக்பாஸ் போட்டியாளர் விஷ்ணுவை சந்தித்த நேஹா "விஜய் சேதுபதி சார் உன்கிட்ட சாரி கேட்க சொன்னாரு அது ஞாபகம் இருக்கா" என்று கேட்கிறார். அதற்கு விஷால் வேறு எதோ சொல்ல "இல்லை நீ சத்தியா உடன் சண்டை என்று தான் சொன்ன வேற வேறமாதிரி சொல்லிட்டு இருக்க அத விடு போயிட்டு முதல்ல சவுந்தர்யா கிட்ட சாரி கேளு" என்று சொல்கிறார். ஆனால் விஷால் அதனை ஏற்றுக்கொள்வதாக இல்லை.
மற்றோரு பக்கம் பவித்ரா தனது நண்பி கிரனிடம் "நிறைய விஷயம் மாற்ற பார்த்தேன் முடியல அப்புறம் நானே புரிஞ்சிக்கிட்டேன்" என்று சொல்லி அழுகிறார். அதற்கு கிரண் "கவலை படாத எப்போதும் உனக்காக நான் இருப்பேன்" என்று சொல்லி சமாதானம் செய்கிறார். இவர்களை தொடர்ந்து இன்னும் எந்த செலிபிரெட்டிஸ் வருகை தர இருக்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்
Listen News!