• Dec 28 2024

நீ எப்படி இருக்கியோ அப்படியே இரு! அருணின் ஆர்லி குயின் கொடுத்த அட்வைஸ்!

subiththira / 17 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பத்தினரும் வந்துபார்த்து செல்கிறார்கள். இந்நிலையில் இன்று பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு வந்துள்ளார். இது தொடர்பான ப்ரோமோ தான் வெளியாகியுள்ளது. 


விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வையில் கார்ட் என்றி கொடுத்து டைட்டில் வின்னரான வி.ஜே அர்ச்சனா இன்று பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார். அர்ச்சனா உள்ளே வருவதை பார்த்த அருண் அதிர்ச்சியாகி பார்க்கிறார். பின்னர் கட்டியணைத்து "மிஸ் யூ" என்று சொல்கிறார் அருண் அதற்கு அர்ச்சனாவும் "நானும் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுனேன்" என்று சொல்கிறார். 


மேலும்  அருண் "நான் எல்லார்கிட்டையும் ஆர்லி குயின் ஆர்லி குயின் என்று சொல்வேன் அந்த ஆர்லி குயின் இவங்க தான்" என்று சொல்கிறார். தனிமையில் பேசிய அர்ச்சனா "இந்த வீட்டுக்குள்ள உங்க கூட இருப்பேன்னு நான் நினைக்கவே இல்லை, நீ எப்படி இருக்கியோ அது ரொம்ப நல்லா இருக்கு. நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுறேன். யாரு என்ன சொன்னாலும் நீ என் ஹீரோ தான்" என்று கூறுகிறார். அதற்கு அருண் "அடுத்த டிக்கெட்டு பினாலியில் நல்லா விளையாடுறேன்" என்று சொல்கிறார். அத்தோடு அர்ச்சனா அழகிய பாடல் ஒன்று பாடுவதுடன் ப்ரோமோ முடிவடைகிறது.

Advertisement

Advertisement