இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் “விடாமுயற்சி” திரைப்படத்தின் முதல் சிங்கிள் தற்போது ரிலீசாகி உள்ளது.“Sawadeeka” என்று ஒலிக்கும் இந்த பாடலை தற்போது அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
நடிகர் அஜித் மற்றும் நடிகை திர்ஷா நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. எம்பி 3 வடிவில் ஆடியோவாக வெளியாகியுள்ள இந்த பாடலின் லிரிக்ஸ் வீடியோ மாலை 5:05 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டுப்புற இசைப் பாடகர் ஆண்டனி தாசன் பாடியுள்ள இந்த பாடலை பாடலசிரியர் தெருக்குறள் அறிவு எழுத, அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த பாடல் செம்ம குத்து பாடலாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக பாடலில் சோசியல் மீடியா வைரல் வசனமான ‘இருங் பாய்’ இடம்பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்குமிடத்து இப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Listen News!