பிரபல நடிகை குஷ்பூ சுந்தர் சமீபத்தில் தான் சென்ற ஹோட்டலில் தனக்கு நேர்ந்த அசம்பாவிதம் குறித்து மனவேதனையுடன் வெளிப்படையாக தனது இன்ஸராகிறேம் ஸ்டோரில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் குழம்பி இருக்கிறார்கள். இந்த விடையம் தற்போது வைரலாகி வருகிறது.
நடிகை குஷ்பு சமீபத்தில் மும்பையில் உள்ள நோவோடேல் என்ற விடுதியில் தங்கி இருந்துள்ளார். அங்கு அவர் இருந்த நாட்களில் தனக்கு மனவேதனை அளித்த விடையம் என்று கூறி இதனை பதிவிட்டுள்ளார். அதாவது "நான் மதியம் 12.30 மணிக்கு ஹோட்டலுக்கு வந்தேன், மாலை 6.30 மணிக்கு தான் என் அறையை எனக்குக் கொடுத்தார்கள். 6 அறைகள் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்தோம். அதே தளத்தில் விசேட சேவை இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தோம். நாங்கள் இருக்க வேண்டிய அறைகள் வெவ்வேறு தளங்களில் சிதறிக்கிடக்கின்றன" என்று பதிவிட்ட புஷ்பு மேலும் சில விடையங்களையும் கூறியுள்ளார்.
அதில் "மாலை 6.30 மணிக்கும், இரவு 11 மணிக்கும் அறைகளின் சாவியை கொடுத்தனர். 80 வயதுக்கு மேற்பட்ட மற்றும் சக்கர நாற்காலியில் இருக்கும் என் அம்மாவுக்கு, மாலை 5.30 மணிக்கு நான் அவர்களை பணிநீக்கம் செய்த பின்னரே வழங்கப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளாக இந்த ஹோட்டலில் ஈகோ பிரச்சினை உள்ளது. உலகம் முழுவதும் நிறைய விடுதிகளில் தங்கி இருந்தேன் ஆனால் இப்படி நடந்தது இல்லை. இப்படி ஒரு வேஸ்ட்டான ஹோட்டல் பார்த்ததும் இல்லை".
"2 மாடி ஹோட்டல் கூட சிறந்த சேவைகளை வழங்கும். அவர்களால் நிர்வகிக்க முடியாவிட்டால் ஏன் ஹோட்டல்களை நடத்துகிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. நோவோடெல், ஜூஹூ போன்ற பெரிய ஹோட்டல்களிடமிருந்து இதனை எதிர்பார்க்க வில்லை. இருந்து இதை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் ஒரு வாடிக்கையாளரை இழந்துள்ளனர். மீண்டும் இங்கு வரவே மாட்டேன்" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார் நடிகை குஷ்பு.
Listen News!