• Jan 18 2025

"வணங்கான்" ஆடியோ லஞ்ச்! தயாராகும் பிரம்மாண்டமான அரங்கம்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் அருண் விஜய் நடித்த வணங்கான் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா  இன்று நடைபெற இருக்கிறது. இதற்காக பிரமாண்டமான முறையில் ஆடியோ லஞ்ச் நடைபெற இருக்கும் அரங்கம் தயாராகும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இயக்குநர் பாலா இயக்கத்தில் பாலா25 படமாக உருவாகி உள்ள திரைப்படம் வணங்கான். இது அடுத்த ஆண்டு ஜனவரி 10 ம் திகதி ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் இதன்  ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடைபெற இருப்பதால் பிரமாண்டமான முறையில் அரங்கத்தினை போஸ்டர்கள் மூலம் வடிவமைத்து உள்ளனர்.


இது அருண் விஜயின் மிக எதிர்பார்க்கப்பட்ட படம் என்பதனாலும், பாலாவின் 25வது திரைப்படம் என்பதனாலும் பாலா25 என்று போட்டு பெரிய பேனர்கள் வைத்துள்ளனர். லைட் செட்களுடன் பார்க்கவே அழகாக இருக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகவே ரசிகர்கள் வாவ், சூப்பர் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.  


இந்நிலையில் இந்த நிகழ்வுக்கு இயக்குநர் பாலா, நடிகர் அருண்விஜய், நடிகை ரோஷ்னி பிரகாஷ் இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ்,சமுத்திரக்கனி, மிஷ்கின், தொழில்நுட்பக் குழுவினர், படக்குழுவினர் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement