தமிழ் சினிமாவில் பிக்பாஸ் மூலம் அறிமுகமாகி பல்வேறு படங்களில் தனது அழகு, நடிப்புத் திறமையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கும் நடிகை ஜனனி, தற்போது தனது புதிய போட்டோஷூட் லுக்கில் இணையத்தை கலக்கி வருகின்றார்.
சமீபத்தில் ரோஸ் கலர் டிரெண்டிங் ஆடையில் கியூட்டான போஸ்களில் ஜனனி ரசிகர்களின் மனங்களைக் கவரந்துள்ளர். ரோஸ் நிறத்தில் ஜனனியின் ஸ்டைல் மற்றும் எளிமை என்பன இணைந்திருக்கிறது. எளிமையான கியூட் அழகை வெளிப்படுத்தும் அந்தப் புகைப்படங்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
ஜனனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தப் புகைப்படங்களை பகிர்ந்தவுடன், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். "அழகா இருக்கீங்க ஜனனி. இந்த லுக் அமோகம்..படம் பண்ணப்போறீங்க போல இருக்கே..!" என ரசிகர்கள் கமெண்ட்ஸில் வாழ்த்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
விஜயுடன் "லியோ" படத்தில் நடித்து மாபெரும் வெற்றியைப் பெற்றதுடன் தற்பொழுது "மைனர்" படத்திலும் நடித்து வருகின்றார். ஜனனியின் ஸ்டைல் எப்பொழுதுமே தனி பாராட்டு பெறுபவை. இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஜனனியின் ரசிகர்கள் தொடர்ந்து அவரின் லுக் பற்றி புகழ்ந்து வருகின்றனர்.
Listen News!