• May 01 2025

அட்ரா சக்க..சுதாகரின் ஆட்டம் க்லோஸ்!பாக்கியா எடுத்த அதிரடி முடிவால் சூடு பிடிக்கும் ஆட்டம்

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்கியா ரெஸ்டாரெண்ட விட்டு வெளியில போறத நினைத்து அழுது கொண்டிருக்கிறார். இதனை அடுத்து ஓனர் உங்க பொருளை எல்லாம் எடுத்திட்டீங்களா என்று பாக்கியாவப் பாத்துக் கேக்கிறார். மேலும் நீங்க எப்பவுமே என்ன தப்பா நினைச்சிறாதீங்க என்கிறார். அதைக் கேட்ட பாக்கியா ரெஸ்டாரெண்ட காலி பண்ண சொன்னது கூட பெரிய விஷயம் இல்ல ஆனா ஒருத்தரோட சேர்ந்து எங்கள காலி பண்ண வச்சீங்க பாருங்க அதுதான் கஷ்டமா இருக்கு என்கிறார்.

மேலும் உங்கள கேட்டால் உங்கட சூழ்நிலைய காரணமா சொல்லுவீங்க சூழ்நிலை எவ்வளவு மோசமா இருந்தாலும் நாம நம்ம இடத்தில இருந்து வழி மாறி போகக் கூடாது என்கிறார். அதனை அடுத்து நீங்க கிளம்ப இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று ஓனர் கேக்கிறார். பின் பாக்கியா இந்த ரெஸ்டாரெண்டப் பற்றி நினைத்துப் பாக்கிறார்.


அதைத் தொடர்ந்து செல்வி ஆகாஷுக்கு எந்த வேலையும் கிடைக்கல என்று சொல்லுறார். அதைக் கேட்ட பாக்கியா எனக்கு கொஞ்ச நாள் நேரம் கொடு நான் ஏதாவது செய்யுறன் என்று சொல்லுறார். மேலும் சுதாகர் என்ற ஒருத்தர் எங்கட வாழ்க்கையில வந்தே இருக்கக் கூடாது என்கிறார். அதனை அடுத்து சுதாகர் பாக்கியா வீட்ட வந்து இனியாவுக்கு வீடு வாங்கிக் கொடுக்கப் போறேன் என்று சொல்லுறார்.

இதைக் கேட்டு அங்க இருந்த எல்லாரும் சந்தோசப்படுகிறார்கள். இதைத் தொடர்ந்து பாக்கியா சுதாகரப் பாத்து  உங்கள இங்க இருக்கிறவ நம்பினாலும் நான் நம்பமாட்டேன் என்று சொல்லுறார். பின் பாக்கியா சுதாகரப் பாத்து தன்ர ரெஸ்டாரெண்டுக்கான பணத்த தரச்சொல்லிக் கேக்கிறார். இதைக் கேட்ட  கோபி நீ சம்மந்தி கிட்ட இப்படிக் கேக்கிறது சரியில்ல என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement