• Mar 23 2025

"உன்னோட EX பாத்தன்.." உண்மையை உடைத்த நடிகை பாவனாவின் அண்ணா..!

Mathumitha / 21 hours ago

Advertisement

Listen News!

தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் என பல மொழிகளில் நடித்த நடிகை பாவனா தமிழில் சித்திரம்பேசுதடி ,அசல் ,ஆர்யா ,ஜெயம்கொண்டான் போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது அவரது அண்ணா இயக்கும் "the door" எனும் திரைப்படத்தின் மூலம் 15 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் காம்பேக் கொடுக்கவுள்ளார்.


கடந்தவாரம் இப் படத்தின் teaser வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. இதனை தொடர்ந்து நடிகை ஊடகங்களிற்கு பரவலாக நேர்காணல்களை வழங்கி வருகின்றார். அந்த வரிசையில் தற்போது அவரது அண்ணாவுடன் நேர்காணலில் கலந்து சிறப்பித்துள்ளார்.


குறித்த நேர்காணலில் அவர்களது சிறுவயது நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். மேலும் பாவனாவின் அண்ணா பாவனா குறித்து " முன்பு பாவனாவிற்கு நிறைய பசங்க propose பண்ண வருவாங்க நேரடியா என்கிட்டயே வந்து சொல்லிடுவாங்க நான் உங்க தங்கச்சியை love பண்றன்னு இப்போவாரைக்கும் நான் இவளை கலாய்ப்பேன் நான் நேற்று உன்னோட ex பாத்தேன்னு " என மிகவும் வேடிக்கையாக பேசியுள்ளார். தற்போது இவர்களது நேர்காணல் வீடியோ இணையத்தில் செம ட்ரெண்டாகியுள்ளது.

Advertisement

Advertisement