தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகின்ற பூஜா ஹெக்டே, தற்போது மீண்டும் ஒருமுறை திரையுலகில் புதிய கதைக்களத்துடன் இறங்கியுள்ளார். முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கும் பூஜா, தற்போது தமிழ் மற்றும் ஹிந்தி திரைத்துறைகளில் ஈடுபாட்டுடன் நடித்து வருகின்றார்.
தமிழ் சினிமாவில் தற்போது பிஸியாகி வரும் பூஜா ஹெக்டே, தளபதி விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் கதாநாயகியாக நடிக்கின்றார். இப்படம் பற்றிய தகவல்களை மிகுந்த ரகசியத்தில் வைத்திருந்தாலும், இப்படம் விஜய்யின் அரசியல் பின்னணி கொண்ட சமூக விழிப்புணர்வுப் படமாக உருவாகியுள்ளது எனக் கூறப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்திலும் பூஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். 90களின் பின்னணியில் உருவாகும் இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா நடிப்பது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
தென்னிந்திய படங்களில் பிஸியாக இருந்த போதிலும், பாலிவூட்டிலும் தன் அழகு மற்றும் நடிப்பால் திகழும் பூஜா ஹெக்டே, தற்போது நடிகர் வருண் தவானுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை என்றாலும், இப்படம் ரொமான்ஸ் மற்றும் காமெடி கலந்த திரைப்படமாக உருவாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். மேலும் இப்படத்திற்கான பூஜையை இன்று படக்குழு நிகழ்த்தியுள்ளது.
Listen News!