• Jan 18 2025

கமல் டார்ச்சர் தாங்காமல் வெளிநாட்டுக்கு ஓடிய நடிகை.. 20 வருடங்களுக்கு மீண்டும் கமலுடன் நடிப்பு..!

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

 கமல் டார்ச்சர் தாங்காமல் வெளிநாட்டுக்கு ஓடிய நடிகை, அதன்பின்னர் திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்ட நிலையில் 20 வருடம் கழித்து மீண்டும் கமல் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு இருப்பதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.  

கமல் நடிப்பில் உருவான ’விருமாண்டி’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை அபிராமி. இந்த படத்தில் இருவர் கெமிஸ்ட்ரி சூப்பராக இருந்ததாகவும் குறிப்பாக பாடல் காட்சிகள் இருவரது ரொமான்ஸ் நடிப்பு ரசிகர்களை கவர்ந்ததாகவும் கூறப்பட்டது.



இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் பேசிய போது ’கமல்ஹாசனுடன் விருமாண்டி படத்தில் அபிராமி நடித்த போது அபிராமியை கமல் ரொம்பவே டார்ச்சர் செய்தார் என்றும், எப்படா அந்த படத்தை முடிப்பேன் என்று பொறுமையுடன் இருந்த அபிராமி ’விருமாண்டி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் வெளிநாட்டுக்கு ஓடி விட்டார் என்றும் கூறியுள்ளார்



மேலும் திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் தற்போது அவர்  பழசை எல்லாம் மறந்து கமலுடன் ‘தக்லைப்’ படத்தில் மீண்டும் நடித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்ட அபிராமி, நீண்ட இடைவெளிக்கு பின் 2015 ஆம் ஆண்டு ’36 வயதினிலேயே’ என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவர் சிறப்பு தோற்றத்தில் ஜோதிகாவின் தோழியாக நடித்திருப்பார். இதனை அடுத்து  மாதவன் நடித்த ‘மாறா’ ‘நித்தம்  ஒரு வானம்’ ’பாபா பிளாக் ஷீப்’ ’ஆர் யூ ஓகே பேபி’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அவர் கமல்ஹாசனின் ’தக்லை’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement