சாதாரண பின்னணி நடிகனாக இருந்து இன்று ஏராளமான ரசிகர்களை கொண்ட நடிகராக வளர்ந்திருக்கும் விஜய் சேதுபதி ஆரம்பத்தில் நடிக்கும் போது அவரது மனைவி சூட்டிங் பார்க்க ஆசைப்பட்டார். ஆனால் அவரை அனுமதிக்கவில்லை மனைவி அவமானப்படுவதை பார்த்த இவர் ஒரு நாள் தனது மனைவி ஆசைப்பட்டது நடக்கணும் எனும் ஆசையுடன் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார்.
தொடர்ந்து பல வெற்றி படங்கள் கொடுத்து வந்தாலும் சமீபகாலமாக இவருக்கு வாய்ப்புகள் குறைந்துள்ளது. மேலும் இவர் பட கதைகளை கேட்காமல் பணத்திற்காக படங்களை நடித்து வந்துள்ளார். தன் மீது இருந்த கடனை நீக்குவதற்காக நல்ல கதைகளை தெரிவு செய்யாமல் நடித்து வந்துள்ளார்.
தொடர்ந்து தோல்வி படங்களில் நடித்த இவருக்கு லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் திரைப்படம் இவரது வாழ்க்கையில் பாரிய திருப்பத்தை கொடுத்தது. மேலும் 96 காதல் கதையில் நடித்து ரசிகர்களின் மனதில் உச்சியில் அமர்ந்தார். மகாராஜா ,விடுதலை படங்களை தொடர்ந்து இவர் அமைதியாக ஒரு சில சூப்பர் படங்களை கை வசம் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவர் 96 படத்தின் பாகம் இரண்டில் நடிக்க மறுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
Listen News!