• Jun 20 2025

ரஜினிகாந்தின் "கூலி" திரைப்பட பட்ஜெட் இத்தனை கோடியா..?

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கும் 'கூலி' திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்ற இப்படம் தென்னிந்திய சினிமாவின் மிக பெரிய எதிர்பார்ப்பில் உள்ள படமாகும்.


இப்படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நாகர்ஜுனா, உபேந்தரா, ஷோபின் ஷபீர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து வருகின்றார். இப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தை ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளியிட தீர்மானித்துள்ளனர்.


இந்நிலையில் இப் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 375 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. அதில் ரஜினியின் சம்பளம் ரூ. 150 கோடி, லோகேஷ் கனகராஜின் சம்பளம் ரூ. 50 கோடி மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் ரூ. 150 கோடி, ப்ரோமோஷன் மற்றும் பப்ளிசிட்டி ரூ. 25 கோடி ஆகும். மேலும் இந்த படத்தினை அமேசான் ப்ரைம் நிறுவனம் 130 கோடி விலை கொடுத்து வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement