• May 30 2025

இந்தியன்2 தோல்வி; தக் லைஃப் படத்தை பாதிக்குமா.? கமலின் மார்க்கெட் பற்றிய பாலுவின் கருத்து

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் தான் "தக் லைஃப்". உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்தினம், இசை மாயாஜால வித்தைக்காரர் ஏ.ஆர்.ரஹ்மான் என ஒரு கனவுக் கூட்டணியாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பலரும் பெருமிதம் அடைந்து கொண்டனர். ஆனால் அந்த நிகழ்வைப் பார்த்த பிறகு, சமூக வலைத்தளங்களில் சிறிய பரபரப்பு ஏற்பட்டது.


இந்நிலையில், சமூக ஊடகங்களில் தனது கருத்துக்களை தெளிவாகவும் சர்வசாதாரணமான முறையிலும் வெளிப்படுத்தக்கூடிய செய்யாறு பாலு, சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில், தக் லைஃப் விழா மற்றும் கமல்ஹாசனைப் பற்றிய முக்கியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

செய்யாறு பாலு கூறுவதாவது, “தக் லைஃப் இசை விழாவில் கமல்ஹாசன், அந்தப் படத்தில் நடித்திருந்த ஜூனியர் artist அனைவரையும் பாராட்டியிருந்தார். அதைப் பார்த்த என் நண்பர்கள் என்னிடம் கேட்டாங்க... ‘பழைய கமல் அப்புடி பாராட்டமாட்டாரே..? கமல் கிட்ட எப்பவுமே ஒரு EGO இருக்கும்…!’" என்றனர்.


அதன் பின்னர் செய்யாறு பாலு, "அது உண்மையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனா 25 வருடங்களுக்கு முன்னர் கமல், ‘திமிரு தான் என் அடையாளம் என்று சொல்லியிருந்தார். அதனால என் நண்பர்கள் சொல்வது ஒரு வகையில் சரியாக இருக்கலாம்..." எனத் தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோவில் செய்யாறு பாலு மிக முக்கியமான ஒரு தகவலையும் பகிர்ந்திருந்தார். அதுதான் தக் லைஃப் படத்தின் வணிக நிலை. “தக் லைஃப் படத்திற்கு satellite rights, OTT மட்டும் தான். வேற எந்த பிஸ்னஸும் கிடையாது. அத்துடன் இந்தியன் 2 படத்திற்குப் பிறகு கமலின் வியாபாரம் குறைந்துவிட்டது.” எனவும் கூறியிருந்தார்.


Advertisement

Advertisement