• Jan 19 2025

இயக்குநர் வெங்கட்பிரபுவின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொள்ள மறுத்த நடிகர் விஜய்- என்ன காரணம் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

 இதைத்தொடந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.


இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், மோகன், பிரபு தேவா, லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.இப்படத்தின் இரண்டாம்கட்டபடப்பிடிப்பு தாய்லாந்தில் ஆரம்பமாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் இயக்குநர் வெங்கட் பிரபுவின் பிறந்தநாள் வந்தது. திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இவருடைய பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.தாய்லாந்தில் உள்ள வெங்கட் பிரபு தளபதி 68 படக்குழுவுடன் யார்ட் போட்டில் விமர்சையாக தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.


 தளபதி 68 படக்குழுவில் இருந்த அனைவரும் இந்த பார்ட்டியில் கலந்துகொண்ட நிலையில், விஜய் மட்டும் இந்த பார்ட்டியில் கலந்துகொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

பார்ட்டியில் மது இருக்கும் என்பதினால் தான் நடிகர் விஜய் கலந்துகொள்ள வில்லை என கூறப்படுகிறது. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement