தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சூர்யா இவர் தற்போது கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் "ரெட்ரோ " படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்திற்கான புரொமோஷன் வேலைகள் மிகவும் பரபரப்பாக தொடங்கியுள்ள நிலையில் சூர்யா தற்போது ஆந்திராவில் புரொமோஷனில் ஈடுபட்டுள்ளார். மேலும் இவர் rj பாலாஜி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து rj பாலாஜி படத்திற்கு இடையில் வெங்கி அட்லூரி படத்திற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளார். இந்த படத்தினை ஜூலையில் ஆரம்பித்து செப்டம்பரில் முடிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது மேலும் சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் "வாடிவாசல் " படம் அக்டோபர் மாதம் ஆரம்பிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சூர்யா வெற்றிமாறனிடம் பௌண்டரி ஸ்கிரிப்ட் கேட்டு பாரிய நெருக்கடி கொடுத்து வருவதாக தெரிய வந்துள்ளது. மேலும் இவரது அடுத்த படமான "ரெட்ரோ " மே மாதம் முதலாம் தேதி வெளியாகவுள்ளது.
Listen News!