தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை கொண்ட நடிகர் அஜித் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய "குட் பேட் அக்லி " திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சினிமா மட்டுமன்றி கார் மற்றும் பைக் ரேஸிங்கிலும் கலக்கி வருகின்றார். சமீபத்தில் துபாயில் இடம்பெற்ற 24 மணிநேர கார் ரேசிங்கில் இந்திய அணி சார்பில் கலந்து மூன்றாம் இடத்தை பெற்றார்.
தொடர்ந்தும் கார் ரேசிங்கில் ஆர்வம் காட்டி வரும் இவர் அண்மையில் சேப்பாக்கத்தில் இடம்பெற்ற csk அணி கிரிக்கெட் போட்டியை குடும்பத்துடன் பார்வையிட சென்றுள்ளார். மேலும் கடந்த ஆண்டு அறிவித்தது போன்று இன்று இவருக்கு பத்ம பூஷன் விருது கிடைத்துள்ளது.
அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்தது போன்று இன்று அஜித்குமார் குடியரசு தலைவர் கையால் பத்ம பூஷன் விருதை பெற்றுள்ளார். ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் பத்மபூஷன் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இவரது விருது விழாவிற்கு முழு குடும்பமும் கலந்து கொண்டுள்ளது.
Listen News!