• Jul 04 2025

சிறுநீரைக் குடித்து காயத்தைக் குணப்படுத்திய பரேஷ் ராவல்..! இது என்னடா புது வைத்தியம்..!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல், தனது நடிப்பால் பாலிவுட்டிலும் தெலுங்கு திரையுலகிலும் தனக்கென ஒரு தனிச்சிறப்பை பெற்றிருந்தார். இவர் பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களையும் பெற்றிருந்தார். தமிழிலும்  சூர்யாவுடன் நடித்த சிறந்த படமான 'சூரரைப்போற்று' ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருந்தது.

இந்நிலையில், சமீபத்திய நேர்காணலில் பரேஷ் ராவல் பகிர்ந்த ஒரு அதிர்ச்சித் தகவல் தற்போது சமூக ஊடகங்களில் வெறித்தனமாக வைரலாகி வருகின்றது. பரேஷ் ராவல், தற்பொழுது தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து நேர்காணல்களில் பகிர்ந்து கொண்டு வருகின்றார். 


அவர் கூறியதாவது, "'கடக்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, என் முழங்காலில் மோசமான காயம் ஏற்பட்டது. அந்த நேரத்தில், என் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று நினைத்தேன். உடல் நலம் மிகவும் மோசமடைந்து, நம்பிக்கையை இழந்த நிலைக்கு சென்றுவிட்டேன்." எனக் கூறியிருந்தார்.

மேலும் அவர் கூறுகையில், "இந்த நிலையில், பிரபல நடிகர் அஜய் தேவ்கனின் தந்தை வீரு தேவ்கன் என்னை நேரில் வந்து பார்த்திருந்தார். அப்போது வீரு தேவ்கன் சிறுநீரைக் குடிக்கும் போது உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். அது காயங்களை விரைவில் குணமாக்கும் என்று அறிவுறுத்தினார். அதேபோல் அந்த வைத்தியம் எனது நோயை குணமாக்கியது." எனக் கூறியிருந்தார்.

Advertisement

Advertisement