• Dec 06 2024

அடடே..!! அம்மணிக்கு காதல் வந்துடுச்சா? முதன் முறையாக மனம் திறந்த த்ரிஷா

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக ஹீரோயின் ஆக நடித்து வரும் ஒரு நடிகை தான் திரிஷா. இவர் 40 வயதை கடந்த போது முரட்டு சிங்கிளாகவே காணப்படுகின்றார். திரிஷா ஓரம் கட்டப்பட்டார் என்று அனைவரும் சொல்லும் நேரத்தில் வரலாற்று திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்து பலரையும் கவர்ந்திருந்தார். அதில் த்ரிஷாவின் அழகும் அவருடைய கேரக்டரும் ரசிக்கப்பட்டது.

தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமாக்களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டுள்ளார் த்ரிஷா. இவர் 18 ஆண்டுகளுக்குப் பிறகு லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படமும் சூப்பர் ஹிட் அடித்தது.

இதைத்தொடர்ந்து அஜித்துடன் விடாமுயற்சி,  சிரஞ்சீவியுடன் விஸ்வாம்பரா, கமலுடன் தக்லைஃப், மோகன் லாலுடன் ராம் என அடுத்தடுத்த படங்களில் ரவுண்டு கட்டி மீண்டும் வலம் வர உள்ளார். சமீபத்தில் வெளியான கோட் திரைப்படத்திலும் இவர் விஜய்யுடன் இணைந்து குத்தாட்டம் ஒன்று போட்டிருந்தார். அதுவும் செம்ம வைரல் ஆனது.


இந்த நிலையில், நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் காதல் தொடர்பில் ஒரு பதிவினை ஷேர் செய்துள்ளார். அதில் வாழ்வில் ஒரு முறை மட்டும் வரும் உண்மை காதல் என்னவென்றால், ஒருவர் உங்களை உண்மையானவராகவே இருக்க விடுவதும் உங்களுடைய புதிய பரிணாமங்களை ஏற்றுக் கொள்வதும் தான் என்று குறிப்பிட்டு Evil Eye இமோஜியையும் பதிவிட்டுள்ளார்.  இதைப் பார்த்த ரசிகர்கள் அடடா திரிஷாவுக்கு காதல் வந்துடுச்சா என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement