• Sep 13 2025

நடிகர் பார்த்திபனின் அரசியல் வருகை! CM நாற்காலியில் உட்கார்ந்த பிறகு யாரும் அமரக்கூடாது..!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலந்த படைப்புகள் மற்றும் வித்தியாசமான திரைப்படங்களால் மக்களின் மனதில் இடம்பிடித்த நடிகரும் இயக்குநருமான ஆர். பார்த்திபன், தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு உணர்ச்சி மிக்க பதிவில், பார்த்திபன் தனது புதிய படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளார். அதிலும் முக்கியமாக, முதல்வர் பதவிக்கே நேரடியாக போட்டியிட இருப்பதாகவும், அதற்கான தனது நோக்கம் மற்றும் தீர்மானங்களை மிகத் தைரியமாக வெளிப்படுத்துவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். 

பார்த்திபன் தனது பதிவில், “பெரியோர்களே, தாய்மார்களே, வாக்காளப் பெருமக்களே! ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன்.

என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் CM நாற்காலியில் அமர்ந்த பிறகு போடப் போகும் முதல் கையெழுத்து – எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது என்பது தான்! போடுங்கம்மா ஓட்டு – ‘Boat’ சின்னத்தைப் பாத்து..!”என்று கூறியுள்ளார்.  இதன் மூலம் தனது புதிய படத்தின் தலைப்பை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். 



Advertisement

Advertisement