• Jan 15 2026

அல்லு அர்ஜுன்- லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் கதை இதுதானா.? இணையத்தில் லீக்கான தகவல்கள்..

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழும் லோகேஷ் கனகராஜ், தனது மாறுபட்ட கதைக்களங்களாலும், ஹாலிவுட் பாணி மேக்கிங்காலும் ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறார். 

சமீப காலமாக அவர் இயக்கத்தில் உருவாகும் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அந்த வரிசையில், தற்போது லோகேஷ் கனகராஜ் தொடர்பான ஒரு புதிய தகவல் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சமீபத்தில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்தில், லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியுள்ளார். இது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தாலும், அதைவிட அதிகமான ஆர்வத்தை ஏற்படுத்திய விஷயம், “அடுத்து லோகேஷ் கனகராஜ் யாரை வைத்து படம் இயக்கப்போகிறார்?” என்பது தான். இந்த கேள்விக்கு தற்போது ஒரு பதில் கிடைத்துள்ளது.

அதாவது, தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கும், ‘புஷ்பா’ படத்தின் மூலம் பான் இந்திய அளவில் பிரபலமான நடிகர் அல்லு அர்ஜுனை, லோகேஷ் கனகராஜ் நேரில் சந்தித்து ஒரு கதையை சொல்லி, அவரிடமிருந்து ஓகே வாங்கியுள்ளார். இந்த சந்திப்பு, தென்னிந்திய சினிமாவில் புதிய கூட்டணிக்கான அடித்தளமாக பார்க்கப்படுகிறது.


இதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள படத்தின் கதையைப் பற்றிய சில முக்கிய தகவல்கள் தற்போது கசிந்து வருகின்றன. அந்த தகவல்களின் படி, இந்த படம் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே எழுதியிருந்த “இரும்புக்கை மாயாவி” என்ற கதையை அடிப்படையாக கொண்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், தற்போதைய காலகட்டத்திற்கும், பான் இந்திய ரசிகர்களுக்கும் ஏற்ற வகையில் அந்த கதையில் பல மாற்றங்களையும், புதுமையான திரைக்கதை அம்சங்களையும் லோகேஷ் கனகராஜ் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கதையின் அடிப்படை, 1962-ஆம் ஆண்டு வெளியான “The Steel Claw” என்ற ஆங்கில நாவலில் இருந்து எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நாவலின் கருப்பொருளை இந்திய சூழலுக்கு ஏற்ப மாற்றி, ஒரு பிரம்மாண்டமான ஆக்ஷன்-சூப்பர் பவர் கதையாக லோகேஷ் கனகராஜ் உருவாக்கி வருகிறார் என்கிறார்கள்.

கதையின் மையமாக, ஒரு விபத்தில் தனது கையை இழந்த ஹீரோ, பின்னர் ஒரு செயற்கை கை (Artificial Hand) பொருத்திக் கொள்கிறான். அதன் பின், ஒரு எதிர்பாராத மின்சார விபத்து காரணமாக, அவன் உடலுக்கு ஒரு விசித்திரமான சக்தி கிடைக்கிறது. அந்த சக்தி என்னவென்றால், அவன் விரும்பும் போது தனது உடலை மறையச் செய்யும் (Invisibility) திறன். இந்த சக்தியை அவன் எப்படி பயன்படுத்துகிறான், அதை நன்மைக்காக பயன்படுத்துகிறானா அல்லது தீமைக்காக பயன்படுத்துகிறானா, அவன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன என்பதே படத்தின் முக்கிய கதைக்களமாக இருக்கும் என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement