தமிழ் சினிமாவில் தனித்துவமான கதாபாத்திரங்களால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் பரணி, சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், தன்னுடைய சினிமா வாழ்க்கையின் மறக்க முடியாத அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

குறிப்பாக, 2009ஆம் ஆண்டு வெளியான ஹிட் திரைப்படமான ‘நாடோடிகள்’ படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி குறித்து அவர் கூறிய கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான ‘நாடோடிகள்’ திரைப்படம், நட்பு, கிராமிய வாழ்க்கை மற்றும் சமூக உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவான மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் சசிகுமார், பரணி உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த நிலையில், சமீபத்திய ஒரு பேட்டியில் பேசிய நடிகர் பரணி, ‘நாடோடிகள்’ படத்தில் இடம்பெற்ற காதில் அடிக்கும் காட்சி குறித்து பேசினார். அந்த காட்சியால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் சிறப்பாக பேசியிருந்தார்.
அதாவது, “நாடோடிகள் படத்தில எனக்கு காதில அடிக்கிற சீன்ல முதலில டம்மி வச்சு அடிச்சாங்க. ஆனா, வளையல அதனால PVC ஐ வைச்சு அடிச்சாங்க. அந்த பாதிப்பு இன்னும் இருக்கு. என்னதான் இன்னைக்கு வரை வலிச்சாலும் அந்த சீனை இன்னைக்கு வரைக்கும் பேசுறாங்க,” என்று பரணி தெரிவித்திருந்தார்.
பரணியின் இந்த பேட்டி, நடிகர்கள் தங்களின் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்க எவ்வளவு அர்ப்பணிப்புடன் உழைக்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணமாக பார்க்கப்படுகிறது. அந்த காட்சிக்காக அவர் உண்மையான வலியை அனுபவித்ததாகவும், அதனால் ஏற்பட்ட பாதிப்பு இன்றுவரை தொடர்வதாகவும் கூறியிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Listen News!