பிரபல நடிகர் செந்தில் தற்பொழுது ஓம் சக்தி அங்காள பரமேஸ்வரி கோயிலில் சாமி தரிசனம் செய்து, தன்னுடைய எதிர்கால திரைநடிப்புகள் குறித்து உரையாடியுள்ளார். அந்த பேட்டியில் செந்தில், “படையப்பா 2 படம் எடுத்தால் அதே கேரக்டர் கொடுத்தாலும் சரி, பக்கத்துல நிக்குற கேரக்டர் கொடுத்தாலும் சரி நடிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

அவரது இந்த உரையாடல் ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த பேட்டி, நடிகர் செந்திலின், திரை உலகத்திற்கான அர்ப்பணிப்பினை வெளிப்படுத்துகிறது.
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் நேற்று (டிசம்பர் 12) கோலாகலமாக நடைபெற்ற நிலையில், ரஜினி ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு பரிசாக அமைந்தது ‘படையப்பா’ திரைப்படத்தின் ரீ-ரிலீஸ்.

இப்படத்தில் செந்தில் தனது அசத்தலான காமெடியால் அதிகளவான ரசிகர்களைக் கவர்ந்திருந்தார். தற்பொழுது அவர், ‘படையப்பா 2’ குறித்து பேசியிருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கின்ற வகையில் அமைந்துள்ளது.
Listen News!