பிரபல தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி தயாரித்தும், இசையமைத்தும், இளவயது காதலர்களுக்கு முழு அனுபவத்தை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட “பூக்கி” திரைப்படம் இன்று, காதலர் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.
காதல், பிரேக்‑அப், நட்பு மற்றும் உறவுகளின் உணர்ச்சிகளை நுட்பமாக அணுகும் இந்த படத்தை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரவேற்கின்றனர்.

இப்படத்தில், அஜய் தீஷன், தனுஷா, பாண்டியராஜன் , சுனில் , லக்ஷ்மி மஞ்சு, விவேக் பிரசன்னா மற்றும் பிளாக் பாண்டி ஆகியோர் நடிக்கின்றனர்.
இளம் தலைமுறையை பிரதானமாகக் கொண்ட “பூக்கி” படத்தில் நடித்த அனைவரும் தங்கள் வேடங்களில் சிறப்பாக நடித்துள்ளனர் என்று விமர்சகர்களின் பாராட்டுக்கள் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் திரைப்படத்தை பார்த்த ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அவர் அதன்போது, “இன்றைய யூத்களில் காதல் மற்றும் பிரேக்கப் கதை தான் இந்த ‘பூக்கி’ என்றும், படத்திற்கு 3.25 ஸ்டார் ரேட்டிங் அளிக்கிறேன். அஜய் தீஷன் மற்றும் தனுஷா இருவரும் கதையை நன்கு உயிரோட்டமாக ஏற்றுள்ளனர். அவர்கள் கொடுத்த வேலையை சிறப்பாகவும் ஜாலியாகவும் செய்துள்ளனர்." என்று கூறியுள்ளார். இவ்வாறு பல விமர்சனங்கள் டுவிட்டரில் வெளியாகி வருகின்றன.
Listen News!