மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் ,திரிஷா ,அர்ஜுன் ,ரெஜினா,ஆரவ் நடிப்பில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மிகவும் மோசமான விமர்சனங்களினை பெற்று வருகின்றது. வசூலிலும் எதிர்பார்த்த அளவு நிலைமை இல்லாமையினால் லைகா நிறுவனம் கோடிகளில் நஷ்டம் அடைந்துள்ளதாக சொல்லப்படுகின்றது.
இதைவிட தியேட்டரில் தற்போது பெரிதளவில் படம் பார்க்க கூட்டம் இல்லை என்கின்ற ஒரு செய்தியும் பரவி வருகின்றது.இதன் உண்மை நிலை எதுவும் இன்னும் தெரியவில்லை மற்றும் படம் வெளியாகி முதல் வாரத்திலேயே 160 கோடிகளை பெற்றுள்ளதாக ஒரு அதிகாரபூர்வமற்ற செய்தியும் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இப் படத்தில் நடித்த நடிகர் ஆரவ் படத்தில் அஜித்தை பார்த்து boomer என கூறியமையினால் தியேட்டரிலேயே ரசிகர்கள் மிகவும் அதிரடியான வார்த்தைகளால் திட்டி தீர்த்த வீடியோக்கள் வைரலாகியிருந்தது.
தற்போது இவர் இப் படத்தில் அஜித் உடன் நடித்தது பெரும் பாக்கியம் உங்களது இந்த dedication ,passion ஒவ்வொரு நாளும் என்னை வியக்க வைத்துள்ளது.இந்த படத்தில் என்னை நம்பி நடிக்க உறுதுணையாக இருந்ததற்கு எனது இதயபூர்வமான நன்றிகள் என கூறி ஒரு கடிதத்தினை தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Listen News!